Tigerpc

Wednesday, February 22, 2012

நகைச்சுவை; இரசித்தவை


நகைச்சுவை; இரசித்தவை
========================

வாங்க சிரிக்கலாம்...


1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கேஏன்?"

"எங்க வீட்டு டிவி ரிப்பேர்துதான்!"
==========================================

2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?"

"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"
==========================================

3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்லசாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் 
எழுப்பிவிடலை"
=========================================

4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"

"பாய் வியாபாரம்!"
=========================================

5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்இனிப்பைக் 
குறைக்கணும்காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர்நீங்க பீசை குறைக்கணும்"
===========================================

6. ஒருவர்: "தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?"

மற்றவர்: "வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"
==========================================

7. நீதிபதி : " அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?" 

திருடன்: "என்னோட சாவி எதுவுமே அந்தப் 
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை 
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க
==========================================

8. தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"

தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"
==========================================

9. "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"

"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"

"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"

"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"

"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
==============================================

10. "இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"

"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"
===============================================

11. "டாக்டர்நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை" 

"
அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலைஅதை சரி பண்ணுங்க டாக்டர்!"
===============================================

12. தொண்டர் 1: "தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?"

தொண்டர் 2: "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"
==============================================

13. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்ததுநான் போயி..."

"என்ன செய்தே?"

" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"=============================================

14. ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"

மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
=============================================

15. "ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்குஇப்படிஉட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?"

" 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார்சார்
=============================================

16. "இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?"

"இது விவாக மேடை இல்லை தலைவரே; 'விவாத மேடை' !
=============================================
.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, November 19, 2011

நகைச்சுவை; இரசித்தவை:


நகைச்சுவை; இரசித்தவை 17
============ ============ ==

1.] "நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"
--------------------------------------------------------------
2.] "நம்ம தலைவர் தேர்தல்ல தோத்தாலும் முதல்வர்
ஆயிட்டாரு"

"எப்படி?"

"ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு
முதல்வர் ஆயிட்டாரு"
------------------------------------------------------ -----------
3.] "நம்ம மன்னர் ராணிக்கும் எதிரி நாட்டு மன்னனுக்கும்
மட்டும்தான் பயப்படுவாரு"

"ஏன் அப்படி?"

"அவஙக ரெண்டு பேருக்கிட்டதானே அடி வாங்குறாரு!!!"
------------------------------------------------------
4.] "உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"

"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்
இல்லயா, அதனாலதான்டி."
-----------------------------------------------
5.] "என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,
கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே
அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"

"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்
சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
-----------------------------------------
6.] "நம்ம தலைவருக்கு அதுதான் சொந்த ஊரு"

"தலைவரு பிறந்த ஊரா?"

"இல்ல... பினாமி பேர்கள்ல அந்த ஊரையே
தலைவர் வாங்கிட்டாரு"
---------------------------------------------
7.] "எங்க கடையில ஏழைகளுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கோம்"

"என்ன திட்டம்?"

"நகையை தொட்டுப் பார்க்க நூறு ரூபாய் மட்டும்ங்கிறதுதான
அந்தத் திட்டம்"
-----------------------------------------------------------
8.] ஆசிரியை: "உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க"

தாய்: "என் பையன் என்ன செய்தான்?"

ஆசிரியை: "என்டா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டால்,
'தேர்தல் ஜுரம்'னு பதில் சொல்றான்."
--------------------------------------------------------------------------------

9.] "நம்ம தலைவர் எப்பவும் எளிமையானவரு"

"எப்படி?"

"அவருக்கு 'நாவலர்' பட்டம் தர்றோம்னு சொன்னதுக்கு,
'துணுக்கர்' பட்டம் போதும்கிறாரே!"
---------------------------------------------------------------------------------

10] "நம்ம தலைவரு ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல வல்லவர்"

"எப்படி?"

"எதிர்கட்சித் தலைவருக்கு 'ஆமை வடை' பிடிக்கும்னு
சொன்னதுக்கு, நம்ம தலைவர் 'எனக்கு முயல் வடை
பிடிக்கும்'ன்னு சொல்றாரு"
----------------------------------------------------------

11] "அந்த டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்"

"எதனாலே?"

"சின்ன ஊசியாப் போடச் சொன்னால் குண்டூசி போதுமாங்கிறார்!"
------------------------------------------------------------------------------

12] "அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி
ஆரம்பிச்சாரு?"

"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்
பயன்படும்னுதான்."
--------------------------------------------------------------------------------


thanks to:   http://nizampakkam.blogspot.com
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக் கலாமே!

நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

   ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா? கீழே உள்ள அணிமேசனை முழுதும் பாருங்கள்.
நண்பர்களே, ஒரே ஒரு அனிமேஷன் படம் மூலம் இன்றைய உலகம்(பூமி) உங்கள் கண்ணுக்கு தெரியுதா? இந்த நிலையை மாற்ற என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்?
                                                                                                                                                           thanks forhttp://tamilspace.com

!!!!!!!!!!!நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!!!!!!!!!!!!!





!!!!!!!!!!!நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!!!!!!!!!!!!!
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.!!!!!!!!
By: Muthu Kkumar

பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS – நமது தளங்களில் வைப்பது எப்படி?


You Are Here: Home » Blogs » பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS – நமது தளங்களில் வைப்பது எப்படி?
     பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS FEED போன்ற சமூக தளங்களின் ஐகான்கள் புதிய அழகிய வடிவில் நமது பிளாக்கில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பிளாக்கில் இருந்த படியே இந்த சமூக தளங்களுக்கு செல்லலாம். இதனால் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS ஆகியவற்றில் உங்களுக்கு பாலோயர்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அழகிய சிறிய ஐகான்களை உங்கள் பிளாக்கில் எப்படி நிறுவுவது என பார்ப்போம்.
1. உங்கள் DASBOARDஇல் DESIGN கிளிக் செய்து ADD A GADGET கிளிக் செய்து Choose Html/Javascript ஐ தேர்ந்தெடுக்கவும்.


2. கீழ்க்காணும் நிரலிகளில் சில மாற்றங்களுடன் பேஸ்ட் செய்யுங்கள்.
<center><a href=“https://www.facebook.com/sprakashkumar” imageanchor=”1″ style=”margin-left: 1em; margin-right: 1em;”><img border=”0″ src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKaDy-p4VCUa_kUOdPzXD9-QguY4oSkIl8QVjj1CRISMS2rHkGiRIB_IxaAyffWTYgzEOtQcyKaKdtySTifUAxWKrzW_Gf9w-oRf8vXPhE_yv8GtI4IyOhESlhN60-828oOPSyOzKbJRk/s1600/facebook-30×43.png” /></a><a href=“http://twitter.com/tamilvaasi” imageanchor=”1″ style=”margin-left: 1em; margin-right: 1em;”><img border=”0″ src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIhJzeCzkuuc3fcHbdC7BP_0e4JwoJ_k47Otpw_DIktJFDMv_8YNkPvH0FIAxRFstrHncB-iL7yfpQlyFN-PFIlGFToBc1pFpE85TC_TCKl_-cygexCAqFTmDakgB_LjhaufMvbAG8H-E/s1600/twitter-30×43.png” /></a><a href=“https://plus.google.com/u/0/106412922467461633842/” imageanchor=”1″ style=”margin-left: 1em; margin-right: 1em;”><img border=”0″ src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidmHMejRL3r9mwedU5QwmRfRB1YSbcdKlzzT6NK_lyoBpdYdC-zBYlzUAdLtYRYQLt6caB0OpZ77OH0-65oE5epngMAewXzV8581Cs_8OUHNDayhKifEVNE7uuS-4RYgs2dvneOtIO_dI/s1600/googleplus-30×43.png” /></a><a href=“http://feeds.feedburner.com/tamilvaasi” imageanchor=”1″ style=”margin-left: 1em; margin-right: 1em;”><img border=”0″ src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbiRxSKOxPcbyTePSQWG7roxOyACam6xiTXLhOp140d2-EjT_GBakmRv30jjaBPbY6uoLXUuBaEmSaYIYMqP9pIXcUl9LzwwYriia7k-nk1wWlBPtqAdjGJWr_J5EJQy7Pa6ntiQ9Xnwg/s1600/rss-30×43.png” /></a><center/></center></center>
மேற்கண்ட நிரலிகளில் மஞ்சள் கலர் காட்டியுள்ள இடங்களில் உங்கள் சமூக தளங்களின் லிங்க்கை கொடுத்து மாற்றவும்.


3. GADGETஐ SAVE செய்யவும். இனி உங்கள் பிளாக்கில் உங்களுக்கு தேவையான இடத்தில் நகர்த்தி வைக்கவும்.

Friday, July 29, 2011

தமிழ் மருத்துவம்..........


சித்த வைத்தியத்தில் ‘சமூலம்’ என்ற ஒரு வார்த்தை உண்டு. சில தாவரங்களில் சில பகுதிகள் மாத்திரமே பயன்படும். தாவரத்தின் எல்லா பாகங்களும் – வேர், தண்டு, பட்டை, காய், பூ, இலை – பயனாகும் தாவரங்களும் உண்டு. ‘சமூலம்’ என்றால் எல்லா பாகங்களும் பயன்படும் என்பது பொருள். அதற்கு சிறந்த உதாரணம் முருங்கை. இலை, காய் முதலியவை தவிர, முருங்கை மரப்பட்டையின் பிசின் கூட பயன்படும். பழங்காலத்திலிருந்தே சிறந்த உணவாக முருங்கை பயன்படுத்தப்பட்டுள்ளது.
முருங்கை கீரையின் பயன்கள்

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்ப​ுகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

அகத்திய முனிவர், முருங்கைக் கீரையை நெய்யில் பொரித்து தினமும் உண்டு வர “யாளி” போல் பலம் பெருகும் என்கிறார். யாளி பத்து யானைகளின் பலம் கொண்டது என்பார்கள். இதை தெரிவிக்கும் அகத்திய முனிவர்களின் பாடல் – “நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
“யாளி” யென விஞ்சுவார் போகத்தில்”
அகத்தியர் குணபாடத்தில் வரும் சித்தர் பாடல் ஒன்று கீழ்வருமாறு
செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமே
நெருங்க யிலையத்த விழி நேரிழையே நல்ல
முருங்கை யிலையை மொழி.
முருங்கை இலையினால் அக்கினி மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிமூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.
இதன் இலையை கட்டிகள் உடைவதற்கும் வதக்கிக் கட்டுதல் உண்டு.
உடல் வலிமை மட்டுமல்ல, உள்ளிருக்கும் நரம்புகளையும் வலுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
மூட்டுவலிகள் போக, தினமும் முருங்கை கீரையை உப்புடன் வேக வைத்து 15 நாள் சாப்பிடவும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் விலகும்.
முருங்கை கீரையில் விட்டமின் ‘ஏ’ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. நீர் விடாமல் வேக வைத்து கண்களின் மீது வைத்து கட்டினால் கண் நோய்கள் நீங்கி இலையின் ரசத்துடன் தேன் சேர்த்து கண்ணிமைகளில் தேய்க்கலாம்.
முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் ‘பற்று’ போடலாம்.
இலைச்சாற்றை 40 கிராம் அளவில், கொடுக்க, நன்றாக வாந்தியாகும்.
முருங்கை கீரை இரத்த சோகையை போக்கும். 10 மிளகு சேர்த்து அரைத்த முருங்கைக் கீரை (ஒரு கைப்பிடி) யை 15 நாள் சாப்பிட வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, 20 நாள் தினசரி காலை, மாலை இரு வேளை தேன் + முருங்கை இலைச்சாறு (15 மில்லி) + 10 மிளகு (பொடித்தது) அருந்தி வரவும்.
முருங்கை கீரை ஆண்மையை பெருக்கும். அதன் சாற்றில் ஜாதிக்காயை உடைத்து சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உலர்த்தி, பொடியாக்கி தினமும் இரவில் 2 கிராம் சாப்பிட்டு வர, காதல் உணர்வுகள் அதிகமாகும்.
சிறுநீர் தாராளமாக, சுலபமாக பிரிய பார்லி கொடுப்பதுண்டு. அத்துடன் முருங்கை கீரை, சீரகம் (கால் ஸ்பூன்) சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும். முருங்கை கீரை சாற்றை குடித்தால் வயிற்று வலி தீரும்.
முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
எள் சேர்த்து சமைத்த முருங்கை கீரை கூட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
முருங்கைக் கீரை ஒரு சர்வரோக நிவாரணி. மலச்சிக்கலை சீக்கிரமாக போக்கும்.
100 கிராம் முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து – 75.9%, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுப்பொருட்கள் – 2.3%, நார்ச்சத்து – 0.9%, கார்போஹைடிரேட் – 12.5%, கால்சியம் – 440 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 70 மில்லிகிராம், அயச்சத்து – 0.85 மில்லிகிராம், விட்டமின் ‘சி’ – 260 மில்லிகிராம், இதர ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் சிறிதளவு, கலோரி அளவு – 92 கிலோ கலோரி.
முருங்கை கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை – தேவையான அளவு
துவரம் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
சின்ன வெங்காயம் – 1 பெரிய கரண்டி அளவு
மிளகாய் வற்றல் – 3
ஜீரகம், கடலைப்பருப்பு – ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
தக்காளி – 2
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பருப்புகளை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.
இதர பொருட்களை தனித்தனியே வறுத்து பொடியாக்கவும்.
பருப்புகளுடன் கீரையை சேர்த்து பொடிகள், உப்பு இவற்றை போட்டு வேக வைக்கவும்.
தனி வாணலியில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி தாளிக்க வேண்டும்.
எண்ணெய்யில் கடலைப் பருப்பு இன்னும் நான்கு ஸ்பூன் விட்டு வறுத்து குழம்பில் போட்டு எலுமிச்சை பழம் சாறு பிழிந்து இறக்கி வைத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம்.
சைனஸ், சளி, அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற கபப் பிரச்சனைகள் முருங்கை கீரை தீர்க்கும்.
முருங்கை கீரை பானம்
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை – 200 கிராம் (இலைகள் மட்டும்)
தண்ணீர் – 500 மி.லி.
தேன் அல்லது நாட்டு சர்க்கரை – 100 கிராம்
தேங்காய் பால் அல்லது திருகல் – 100 கிராம்
செய்முறை
கீரைகள், இலைகளை கழுவவும்.
மிக்ஸியில் ஸ்பீடு ஒன்றில் அரைக்கவும்.
நீர் சேர்த்து வடிகட்டி சாறு பிழியவும்.
கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளுடன் தேங்காய் பால் கலக்கலாம்.
இனிப்புத் தேவையெனில் கலக்கலாம்.
ஒரு டம்ளர் சாறை ஐந்து நிமிடம் ஸ்பூன் மூலம் சாப்பிட வேண்டும்.
முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இலைகளை பொடியாக சாப்பிடும் சமயம் 5 முதல் 10 கிராம் வரை ஒரு வேளைக்குச் சாப்பிடலாம்.
இரவில் ஜீரணத்தை தடை செய்யும் சமைத்த, வேக வைத்த கீரைகள் நீக்கவும். ஆனால், கீரைப் பொடிகளைச் சாப்பிடலாம். இரவில் சமைத்த கீரைகள், தயிர் தவிர்க்கவும்.
தொடர்ந்து கீரைச்சாறுகள் சாப்பிடுவதில் பயம் கொள்ளத் தேவையில்லை.
பிற விஷச்செடிகள் கீரைகளில் கலந்து உள்ளதா என சரி பார்த்து பின் சாறு தயாரிக்க வேண்டும்.
முருங்கைக் கீரை பொறியல்
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை – 1 கட்டு
நெய் – தாளிப்பதற்கு
சீரகம் – தாளிப்பதற்கு
கறிவேப்பிலை – தாளிப்பதற்கு
தேங்காய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுத்தம் பருப்பு – தாளிப்பதற்கு
செய்முறை
முருங்கைக்கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து (பழுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும்). பிறகு நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் கழுவி வைத்துள்ள கீரையை போட்டு தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து வேக விட வேண்டும். (மூடக்கூடாது) நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும். இந்த இதழில் முருங்கைக்கீரையைப் பற்றி பார்ப்போம். அடுத்த இதழில் முருங்கையின் முழுப்பயனைப் பார்ப்போம்.
உணவு நலம் ஆகஸ்ட் 2010
முருங்கைக்கீரையின் முழுப்பயன்சித்த வைத்தியத்தில் ‘சமூலம்’ என்ற ஒரு வார்த்தை உண்டு. சில தாவரங்களில் சில பகுதிகள் மாத்திரமே பயன்படும். தாவரத்தின் எல்லா பாகங்களும் – வேர், தண்டு, பட்டை, காய், பூ, இலை – பயனாகும் தாவரங்களும் உண்டு. ‘சமூலம்’ என்றால் எல்லா பாகங்களும் பயன்படும் என்பது பொருள். அதற்கு சிறந்த உதாரணம் முருங்கை. இலை, காய் முதலியவை தவிர, முருங்கை மரப்பட்டையின் பிசின் கூட பயன்படும். பழங்காலத்திலிருந்தே சிறந்த உணவாக முருங்கை பயன்படுத்தப்பட்டுள்ளது.முருங்க​ை கீரையின் பயன்கள்அகத்திய முனிவர், முருங்கைக் கீரையை நெய்யில் பொரித்து தினமும் உண்டு வர “யாளி” போல் பலம் பெருகும் என்கிறார். யாளி பத்து யானைகளின் பலம் கொண்டது என்பார்கள். இதை தெரிவிக்கும் அகத்திய முனிவர்களின் பாடல் – “நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்”யாளி” யென விஞ்சுவார் போகத்தில்”அகத்தியர் குணபாடத்தில் வரும் சித்தர் பாடல் ஒன்று கீழ்வருமாறுசெறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமேநெருங்க யிலையத்த விழி நேரிழையே நல்லமுருங்கை யிலையை மொழி.முருங்கை இலையினால் அக்கினி மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிமூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.இதன் இலையை கட்டிகள் உடைவதற்கும் வதக்கிக் கட்டுதல் உண்டு.உடல் வலிமை மட்டுமல்ல, உள்ளிருக்கும் நரம்புகளையும் வலுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை போக்கும்.மூட்டுவலிகள் போக, தினமும் முருங்கை கீரையை உப்புடன் வேக வைத்து 15 நாள் சாப்பிடவும்.முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் விலகும்.முருங்கை கீரையில் விட்டமின் ‘ஏ’ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. நீர் விடாமல் வேக வைத்து கண்களின் மீது வைத்து கட்டினால் கண் நோய்கள் நீங்கி இலையின் ரசத்துடன் தேன் சேர்த்து கண்ணிமைகளில் தேய்க்கலாம்.முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் ‘பற்று’ போடலாம்.இலைச்சாற்றை 40 கிராம் அளவில், கொடுக்க, நன்றாக வாந்தியாகும்.முருங்கை கீரை இரத்த சோகையை போக்கும். 10 மிளகு சேர்த்து அரைத்த முருங்கைக் கீரை (ஒரு கைப்பிடி) யை 15 நாள் சாப்பிட வேண்டும்.உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, 20 நாள் தினசரி காலை, மாலை இரு வேளை தேன் + முருங்கை இலைச்சாறு (15 மில்லி) + 10 மிளகு (பொடித்தது) அருந்தி வரவும்.முருங்கை கீரை ஆண்மையை பெருக்கும். அதன் சாற்றில் ஜாதிக்காயை உடைத்து சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உலர்த்தி, பொடியாக்கி தினமும் இரவில் 2 கிராம் சாப்பிட்டு வர, காதல் உணர்வுகள் அதிகமாகும். சிறுநீர் தாராளமாக, சுலபமாக பிரிய பார்லி கொடுப்பதுண்டு. அத்துடன் முருங்கை கீரை, சீரகம் (கால் ஸ்பூன்) சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும். முருங்கை கீரை சாற்றை குடித்தால் வயிற்று வலி தீரும். முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் அழியும்.எள் சேர்த்து சமைத்த முருங்கை கீரை கூட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.முருங்கைக் கீரை ஒரு சர்வரோக நிவாரணி. மலச்சிக்கலை சீக்கிரமாக போக்கும்.
100 கிராம் முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்நீர்ச்சத்து – 75.9%, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுப்பொருட்கள் – 2.3%, நார்ச்சத்து – 0.9%, கார்போஹைடிரேட் – 12.5%, கால்சியம் – 440 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 70 மில்லிகிராம், அயச்சத்து – 0.85 மில்லிகிராம், விட்டமின் ‘சி’ – 260 மில்லிகிராம், இதர ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் சிறிதளவு, கலோரி அளவு – 92 கிலோ கலோரி.முருங்கை கீரை கூட்டுதேவையான பொருட்கள்முருங்கை கீரை – தேவையான அளவுதுவரம் பருப்பு – 50 கிராம்பாசிப் பருப்பு – 50 கிராம்தேங்காய் – 1/2 மூடிசின்ன வெங்காயம் – 1 பெரிய கரண்டி அளவு மிளகாய் வற்றல் – 3ஜீரகம், கடலைப்பருப்பு – ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்தனியா – 2 ஸ்பூன்தக்காளி – 2நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்பெருங்காயம் – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறைமுதலில் பருப்புகளை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.இதர பொருட்களை தனித்தனியே வறுத்து பொடியாக்கவும்.பருப்புகளுடன் கீரையை சேர்த்து பொடிகள், உப்பு இவற்றை போட்டு வேக வைக்கவும்.தனி வாணலியில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி தாளிக்க வேண்டும். எண்ணெய்யில் கடலைப் பருப்பு இன்னும் நான்கு ஸ்பூன் விட்டு வறுத்து குழம்பில் போட்டு எலுமிச்சை பழம் சாறு பிழிந்து இறக்கி வைத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம்.சைனஸ், சளி, அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற கபப் பிரச்சனைகள் முருங்கை கீரை தீர்க்கும்.முருங்கை கீரை பானம்தேவையான பொருட்கள்முருங்கை கீரை – 200 கிராம் (இலைகள் மட்டும்)தண்ணீர் – 500 மி.லி.தேன் அல்லது நாட்டு சர்க்கரை – 100 கிராம்தேங்காய் பால் அல்லது திருகல் – 100 கிராம்செய்முறைகீரைகள், இலைகளை கழுவவும்.மிக்ஸியில் ஸ்பீடு ஒன்றில் அரைக்கவும்.நீர் சேர்த்து வடிகட்டி சாறு பிழியவும்.கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளுடன் தேங்காய் பால் கலக்கலாம்.இனிப்புத் தேவையெனில் கலக்கலாம்.ஒரு டம்ளர் சாறை ஐந்து நிமிடம் ஸ்பூன் மூலம் சாப்பிட வேண்டும்.முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இலைகளை பொடியாக சாப்பிடும் சமயம் 5 முதல் 10 கிராம் வரை ஒரு வேளைக்குச் சாப்பிடலாம்.இரவில் ஜீரணத்தை தடை செய்யும் சமைத்த, வேக வைத்த கீரைகள் நீக்கவும். ஆனால், கீரைப் பொடிகளைச் சாப்பிடலாம். இரவில் சமைத்த கீரைகள், தயிர் தவிர்க்கவும்.தொடர்ந்து கீரைச்சாறுகள் சாப்பிடுவதில் பயம் கொள்ளத் தேவையில்லை.பிற விஷச்செடிகள் கீரைகளில் கலந்து உள்ளதா என சரி பார்த்து பின் சாறு தயாரிக்க வேண்டும்.முருங்கைக் கீரை பொறியல்தேவையான பொருட்கள்முருங்கைக் கீரை – 1 கட்டுநெய் – தாளிப்பதற்குசீரகம் – தாளிப்பதற்குகறிவேப்பிலை – தாளிப்பதற்குதேங்காய் – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுஉளுத்தம் பருப்பு – தாளிப்பதற்குசெய்முறைமுருங்கைக்​கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து (பழுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும்). பிறகு நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் கழுவி வைத்துள்ள கீரையை போட்டு தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து வேக விட வேண்டும். (மூடக்கூடாது) நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
தமிழ் மருத்துவம்