Tigerpc

Friday, July 29, 2011

இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……

இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……

இணையத்தில் தமிழ் நூல்கள் பிடிஎப் முறையிலும்,
யுனிகோடு முறையிலும் பரவலாகக் கிடைக்கும் நிலையில்
ஒலி வடிவிலான தமிழ் தரவுகள் சற்று குறைவான நிலையிலேயே கிடைக்கும் நிலைஉள்ளது.

வெற்றிப்படிகள்
சொற்பொழிவுகளின் வானொலி ஒலிக்கோப்புகள்
ஒலிப்புத்தகங்கள்

என எம்பி 3 வடிவில் தமிழ்த் தரவுகள் கிடைக்கின்ற நிலையில்…..
தமிழ் எழுத்துருக்களை பேச்சுருக்களாக மாற்றும் வசதி

ஆம் ஆங்கில எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள

ஸ்போக்கன் டெக்ஸ்ட்,
ஓட்காட்ஸ்ட் என பல இணையதளங்கள் அணிவகுத்து நின்றாலும் தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள ஒரு வசதி இல்லையே என எண்ணியதுண்டு.

அச்சூழலிலும் தமிங்கில முறையில் தமிழ் எழுத்துருக்களை அத்தளங்களில் இட்டு ஒலிக்கோப்பாக முயன்றேன்.

இந்நிலையில் இன்றைய தேவையைக் கருத்தில் கொண்டு யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக ஆக்கிக்கொள்ள உதவுவதாக ஒரு இணையதள

இணையதள முகவரி http://mile.ee.iisc.ernet.​in:8080/tts_demo/
செய்முறை விளக்க முகவரி
இந்த தளத்துக்குச் சென்று நீங்கள் மாற்ற வேண்டிய யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை அந்த கட்டத்தில் இட்டு சமர்ப்பிக்கவும்.
பிறகு பதிவிறக்கினால் எம்பி3 வடிவில் கிடைக்கும்.

நீ்ங்கள் இடைவெளி, புள்ளி இட்டதற்கு இணங்க ஓர் ஆணின் குரலில் உங்கள் தமிழ்ப்பதிவு ஒலிக்கும்.

இணையத்தில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இதைக் கருதுகிறேன்.

ஆம் எழுத்துக்களைப் படிக்கும் நிலைக்கு ஒரு மாற்றாக இவ்வொலி முறை அமையும்.

சங்க இலக்கியம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வடிவில் உருவாக்கிக்கொள்ள இம்முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

இதனை இணைய இணைப்பின் போது மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
மாறாக ஒரு மென்பொருளாக உருவாக்கி ஆப்லைன் எனப்படும் இணைய இணைப்பில்லா நிலையிலும் பயன்படு்த்தும் வசதியை ஏற்படுத்தினால் மேலும் நன்றாக இருக்கும்..

http://mile.ee.iisc.ernet.​in:8080/tts_demo/

http://mile.ee.iisc.ernet.​in:8080/tts_demo


Thanks - http://gunathamizh.blogspo​t.com/2009/10/3.html

No comments:

Post a Comment